ADDED : ஆக 30, 2024 10:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி:அவிநாசி அடுத்த ராக்கியாபாளையம், பாலாஜி நகரில் வசிப்பவர் ரேணுகாதேவி, 34. திருப்பூரில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் பணிபுரிகிறார். இவரது கணவர் கனகராஜ், எட்டு ஆண்டுகள் முன்பு இறந்துவிட்டார். மகன் ஹர்ஷன், 14, ராக்கியாபாளையம், அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வந்த ஹர்ஷன், டியூஷன் சென்டர் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தார்.
மாடியில் உள்ள அறைக்கு சென்றவர் நீண்டநேரம் ஆகியும் வரவில்லை. அவரது பாட்டி சுமதி சென்றுபார்த்தபோது, படுக்கையறையில் துாக்கிட்டு ஹர்ஷன் இறந்தது தெரியவந்தது. திருமுருகன் பூண்டி போலீசார் வழக்குபதிந்து, ஹர்ஷன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.