/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மது போதையில் தகராறு: சிறுவனுக்கு கத்திக்குத்து
/
மது போதையில் தகராறு: சிறுவனுக்கு கத்திக்குத்து
ADDED : மார் 21, 2024 11:38 AM
பல்லடம்;பல்லடம் அடுத்த, குன்னாங்கல்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம், 40. இவருக்கு சொந்தமான வீட்டில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த செல்வகுமார், 38 என்பவர் வசிக்கிறார். மகாலிங்கத்திற்கும், செல்வகுமாருக்கும்  இடையே கொடுக்கல் வாங்கல் உள்ளது.
நேற்று முன்தினம், தனது 18 வயது மகனுடன் சென்ற மகாலிங்கம், வாங்கிய கடன் தொகையை திருப்பித் தருமாறு செல்வக்குமாரிடம் கேட்டுள்ளார். இது தொடர்பாக, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. மது போதையில் இருந்த செல்வகுமார், கத்தியால் மகாலிங்கத்தை தாக்க முயன்றார். மகாலிங்கம் சுதாரித்துக் கொள்ள, குறுக்கே வந்த அவரின் மகனுக்கு கத்திக்குத்து விழுந்தது.
மயக்கமடைந்த சிறுவன், திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, தப்பி ஓடி தலைமறைவாக இருந்த செல்வகுமாரை கைது செய்த பல்லடம் போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி, திருப்பூர் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

