/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இணைப்பு ரோட்டில் பாலம் இரு கிராம மக்கள் எதிர்பார்ப்பு
/
இணைப்பு ரோட்டில் பாலம் இரு கிராம மக்கள் எதிர்பார்ப்பு
இணைப்பு ரோட்டில் பாலம் இரு கிராம மக்கள் எதிர்பார்ப்பு
இணைப்பு ரோட்டில் பாலம் இரு கிராம மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 24, 2024 01:43 AM
உடுமலை:கிராம இணைப்பு ரோட்டில், உப்பாறு ஓடை குறுக்கிடும் இடத்தில், உயர் மட்ட பாலம் கட்ட வேண்டும் என இரு கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குடிமங்கலம் ஒன்றியம், ஆமந்தகடவு - அம்மாபட்டி கிராமத்துக்கு இடையில், உப்பாறு ஓடை செல்கிறது.
பி.ஏ.பி., பிரதான கால்வாயில் இருந்து தாராபுரம் உப்பாறு அணைக்கு, இந்த ஓடையின் வழியாகவே தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும், பல்வேறு கிராமங்களின், மழை நீர் ஓடைகள் இணைவதால், உப்பாற்றில் மழைக்காலங்களில், அதிக வெள்ளப்பெருக்கு இருக்கும்.
இந்நிலையில், அம்மாபட்டியிலிருந்து ஆமந்தகடவு செல்லும் இணைப்பு ரோட்டில், உப்பாற்றின் குறுக்கே தரை மட்ட பாலம் மட்டுமே உள்ளது. பாலத்தின் அருகில், ஆற்றின் குறுக்கே தடுப்பணையும் கட்டப்பட்டுள்ளது.
இருப்பினும், மழைக்காலத்தில், தரை மட்ட பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், இரு கிராம மக்களும், பல கி.மீ., துாரம் பயணித்து, பல்லடம் மாநில நெடுஞ்சாலைக்கு சென்று, பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இப்பிரச்னைக்கு தீர்வாக, உப்பாற்றின் குறுக்கே, உயர் மட்ட பாலம் கட்ட வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நெடுஞ்சாலைத்துறை வாயிலாக அப்பகுதியில் ஆய்வு செய்து, உயர் மட்ட பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.