ADDED : மார் 29, 2024 10:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை;உடுமலை அருகே குமரலிங்கத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலையிலிருந்து பழநிக்கு மடத்துக்குளம், கொழுமம் வழியாக இரு வழித்தடங்களில் வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் உடுமலை - கொழுமம் ரோடு மாற்றுப்பாதையாகவும் உள்ளது. இந்த ரோட்டில் உள்ள குமரலிங்கத்தில் பல்வேறு கிராமங்களின் சந்திப்பாக உள்ளது. ஆனால், இங்கு பஸ் ஸ்டாண்ட் இல்லாததால், பஸ் நிறுத்தத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, பஸ் ஸ்டாண்ட் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

