/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பராமரிப்பின்றி மாயமாகும் கால்வாய் பாதை: பொதுப்பணித்துறை அலட்சியம்
/
பராமரிப்பின்றி மாயமாகும் கால்வாய் பாதை: பொதுப்பணித்துறை அலட்சியம்
பராமரிப்பின்றி மாயமாகும் கால்வாய் பாதை: பொதுப்பணித்துறை அலட்சியம்
பராமரிப்பின்றி மாயமாகும் கால்வாய் பாதை: பொதுப்பணித்துறை அலட்சியம்
ADDED : மே 07, 2024 01:24 AM
உடுமலை:உடுமலை தாலுகாவில், பிரதான பாசன திட்டமாக பி.ஏ.பி., உள்ளது. பல ஆயிரம் ஏக்கர் பாசனத்துக்கு ஆதாரமான இக்கால்வாய்கள், பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையின் பராமரிப்பில் உள்ளன.
பிரதான, கிளை கால்வாய் பராமரிப்பு மற்றும் கண்காணிப்புக்கு, பொதுப்பணித்துறையின் பல்வேறு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாசன காலங்களில், நீர் திருட்டை தடுக்கவும், கண்காணிப்புக்கும், கால்வாய் கரையில், வாகனங்கள் செல்லும் வகையில், பொதுப்பணித்துறையின் பாதை அமைக்கப்பட்டிருந்தது.
பிற அத்துமீறல்களை தடுக்க, இந்த பாதையின் குறுக்கே, சங்கிலி தடுப்புகளும் அமைக்கப்பட்டு, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்தது. குறிப்பிட்ட இடைவெளியில், மண் கொட்டியும், ஜல்லிக்கற்களால், கப்பி சாலையும் அமைக்கப்பட்டது.
இவ்வாறு, கால்வாய் கரை பாதை பராமரிப்புக்கு, அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வந்தது. இந்த பாதையை விவசாயிகளும் முக்கிய வழித்தடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது பெரும்பாலான கிளை கால்வாய் கரைகளில், பாதை இருந்த சுவடே இல்லாமல் மறைந்துள்ளது.
ஆக்கிரமிப்பு மற்றும் முறையாக பராமரிக்காமல், புதர் மண்டியது உள்ளிட்ட காரணங்களால், இப்பாதைகள் மறைந்து விட்டன. மேலும், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடிவதில்லை.
பாசன காலத்தில், நீர் திருட்டை தடுக்க, அவ்வழியாக பொதுப்பணித்துறை வாகனங்கள் செல்ல முடியாமல், குறிப்பிட்ட தொலைவுடன் திரும்பும் நிலை உள்ளது.
உடுமலை, பூலாங்கிணறு, புதுப்பாளையம் உள்ளிட்ட கிளை கால்வாய்களில், மண்டல பாசனம் துவங்கும் முன், கரையிலுள்ள புதர்கள் அகற்றப்பட்டாலும், பாதை பராமரிப்பை கண்டுகொள்வதில்லை.
இவ்வாறு, படிப்படியாக பாதைகள் மாயமாகி வருவதால், நீர்நிர்வாகத்தில், பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. கால்வாய் பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாதையை மேம்படுத்த வேண்டும் என பாசன விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.