/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மின் கம்பியில் உரசி சோளத்தட்டு வாகனத்தில் தீ
/
மின் கம்பியில் உரசி சோளத்தட்டு வாகனத்தில் தீ
ADDED : ஆக 01, 2024 01:18 AM

பொங்கலுார் : பொங்கலுார் ஒன்றியம், சேமலை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, 50; விவசாயி.
தனது தோட்டத்திலிருந்து இன்னொரு தோட்டத்துக்கு, டிராக்டரில் தட்டு ஏற்றிக்கொண்டு சென்றார். அப்போது, ரோட்டோரத்தில் இருந்த மின் கம்பி உரசியதால் டிராக்டர் தீப்பிடித்தது. சிறிது துாரம் டிராக்டரை ஓட்டிச் சென்று தட்டை மட்டும் கீழே கவிழ்த்து விட்டார். தட்டு தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்து நாசமானது. டிராக்டர் தப்பியது.
இதே போல பொள்ளாச்சியில் இருந்து தென்னை மட்டை ஏற்றிக் கொண்டு பழநிக்கு சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தது. தாராபுரம் அருகே தென்னை மட்டையில் திடீரென தீப்பிடித்தது. இதுகுறித்த தகவலின் பேரில் தாராபுரம் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். தென்னை மட்டை சிறிது எரிந்து சேதம் ஆனது. வேன் தப்பியது.