/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறுமிகள் வன்கொடுமை கூடுதல் பிரிவில் வழக்கு
/
சிறுமிகள் வன்கொடுமை கூடுதல் பிரிவில் வழக்கு
ADDED : மே 16, 2024 02:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை:திருப்பூர் மாவட்டம் உடுமலையில், 13 மற்றும் 17 வயதுடைய இரு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். ஒரு சிறுமி, நான்கு மாத கர்ப்பமாக உள்ள நிலையில், அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மூன்று சிறுவர்கள் உட்பட ஒன்பது பேரை கைது செய்தனர்.
ஆறு பேர் திருப்பூர் சிறையிலும், மூன்று சிறுவர்கள் கோவை கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜெயகாளீஸ்வரன், ஒரு சிறுவன் தவிர, மதன்குமார், பரணிக்குமார், பிரகாஷ், நந்தகோபால், பவாபாரதி மற்றும் இரு சிறுவர்கள் மீது கூடுதலாக எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை பிரிவிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.