/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரயில்வே ஸ்டேஷனில் மலிவு விலை உணவகம்: பயணியர் எதிர்பார்ப்பு
/
ரயில்வே ஸ்டேஷனில் மலிவு விலை உணவகம்: பயணியர் எதிர்பார்ப்பு
ரயில்வே ஸ்டேஷனில் மலிவு விலை உணவகம்: பயணியர் எதிர்பார்ப்பு
ரயில்வே ஸ்டேஷனில் மலிவு விலை உணவகம்: பயணியர் எதிர்பார்ப்பு
ADDED : மே 04, 2024 11:24 PM
திருப்பூர்:இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.,) சார்பில் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணம் செய்பவர்களுக்கு சாப்பாடு, டிபன் உட்பட மலிவு விலையில் உணவு விற்பனை பிளாட்பார்ம்களில் துவங்கப்பட்டுள்ளது.
ஸ்டேஷன்களில் முன்பதிவில்லா பெட்டிகள் நிற்குமிடங்களில், இத்தகைய மலிவு விலை கடைகள் அமைக்கப்படுகிறது. 20 ரூபாய்க்கு ஏழு பூரி, 20 ரூபாய்க்கு, 200 கிராம் புளி அல்லது தயிர் அல்லது எலுமிச்சை சாதாம், 50 ரூபாய்க்கு சாப்பாடு ஆகியன விற்கப்படுகிறது.
தெற்கு ரயில்வே உட்பட்ட, 34 ஸ்டேஷன்களில் மலிவு விலை உணவு விற்பனை கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் சேலம் கோட்டத்தில் ஈரோடு, கோவை, சேலம், மேட்டுப்பாளையம் ஸ்டேஷன்கள் சேர்க்கப்பட்டுள்ளது. திருப்பூர் ஸ்டேஷன் சேர்க்கப்படவில்லை.
திருப்பூரில் இருந்து தினசரி ரயில் மூலம், 5 ஆயிரம் பயணிகள் பயணிக்கின்றனர். 7,500 பேர் வந்திறங்குகின்றனர். பகலை விட இரவில் ரயில்களும், ரயில்களின் பயணிப்போரும் அதிகம். எனவே, திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனிலும் மலிவு விலை உணவகம் நிறுவ தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பது ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு.