/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஸ்மார்ட் சிட்டி' நிதி பெரும் வீணடிப்பு
/
'ஸ்மார்ட் சிட்டி' நிதி பெரும் வீணடிப்பு
ADDED : ஜூன் 11, 2024 12:33 AM

திருப்பூர்;திருப்பூரில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருவாய் நோக்கில் செய்யப்பட்ட வளர்ச்சிப் பணிகள் கேட்பாரற்றுக் கிடப்பது, திட்டத்தின் நோக்கம் முழுமை பெறாத நிலையை காட்டுவதாக உள்ளது.
திருப்பூரில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு பணிகள் துவங்கப்பட்டன. இதில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் சில பணிகள் நிறைவடைந்தும், சில பணிகள் நிறைவடையாமல் நடந்தும் வருகிறது.
மத்திய பஸ் ஸ்டாண்ட்
காமராஜ் ரோட்டில் உள்ள மத்திய பஸ் ஸ்டாண்ட் வளாகம் முற்றிலும் இடித்து அகற்றப்பட்டு, 37 கோடி ரூபாய் மதிப்பில் வணிக வளாக கடைகள் மற்றும் பல்வேறு வசதிகளுடன் புதிய வடிவம் எடுத்தது. இதில், வணிக வளாக கடைகள் எந்த கட்டுப்பாடும், கண்காணிப்பும் இன்றி, ஆக்கிரமிப்புகளாகவும், பயணிகளுக்கு வசதியை தருவதை விட அவதியை தரும் வகையிலும் உள்ளன.
கழிப்பிடங்கள் பராமரிப்பு சொல்ல முடியாத நிலையில் உள்ளது. பஸ்கள் நிறுத்துவது முறையாக இல்லை. தானியங்கி படிக்கட்டுகள் எதற்கு அமைக்கப்பட்டது என்றே தெரியாமல் வீணாக கிடக்கிறது.
புதிய பஸ் ஸ்டாண்ட்
பி.என்., ரோட்டில் உள்ள புதிய பஸ் ஸ்டாண்ட், 30 கோடி ரூபாய் மதிப்பில் புதிய வணிக வளாகம் கட்டியும், வளாகம் முழுவதும் சீரமைப்பு செய்தும் திறக்கப்பட்டது. பஸ்கள் உள்ளே வந்து செல்வதில்லை. வணிக வளாகத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இங்குள்ள 44 கடைகள் கொண்ட வளாகம் திறப்பு விழா முடிந்து பூட்டு போடப்பட்டது. பல மாதமாகியும் திறக்கப்படவில்லை.கடைகளை ஏலம் எடுக்க யாரும் முன் வராமல் வீணாகக் கிடக்கிறது. இது வரை ஏலத்துக்கான அழைப்பு, 4 முறை விடப்பட்டுள்ளது. ஒருவர் கூட ஏலம் கேட்க முன் வரவில்லை.
--- மேலும் செய்தி 3-ம் பக்கம்