/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரியவகை நோய் பாதித்த சிறுவன் முதல்வரின் உதவி கோரும் தம்பதி
/
அரியவகை நோய் பாதித்த சிறுவன் முதல்வரின் உதவி கோரும் தம்பதி
அரியவகை நோய் பாதித்த சிறுவன் முதல்வரின் உதவி கோரும் தம்பதி
அரியவகை நோய் பாதித்த சிறுவன் முதல்வரின் உதவி கோரும் தம்பதி
ADDED : ஜூலை 23, 2024 09:15 PM

திருப்பூர்:அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர், முதல்வரிடம் உதவி கேட்டு மனு அளித்தனர்.
திருப்பூர், காங்கேயம் ரோடு, நாச்சிபாளையத்தைச் சேர்ந்த ரமேஷ் - பிரியங்கா தம்பதியர், அரியவகை நோய் பாதித்த தங்களது மகனை காப்பாற்ற, கலெக்டர் கிறிஸ்துராஜிடம் நேற்று மனு அளித்தனர்.
சிறுவனின் தந்தை ரமஷ் கூறியதாவது:
எங்கள் நான்கு வயது மகன் பிரஜித், ஒன்றரை ஆண்டாக, அப்லஸ்டிக் அனீமியா எனப்படும் எலும்பு மஜ்ஜை செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மகனின் உயிரை காப்பாற்ற, 'ஸ்டெம்செல் டிரான்ஸ்பிளான்டேஷன்' சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது.
இதற்கு 16 முதல், 18 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என, மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை அளித்துள்ளது. சிறு வியாபாரியான என்னால், அவ்வளவு தொகையை செலவிட இயலாது. தமிழக முதல்வர் தாயுள்ளத்தோடு மருத்துவ செலவினங்களை ஏற்று, எங்கள் மகனின் உயிரை மீட்டுக்கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.