/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சோளம் அதிகம் விளைய செயல் விளக்கத்திடல்
/
சோளம் அதிகம் விளைய செயல் விளக்கத்திடல்
ADDED : ஆக 21, 2024 11:53 PM
உடுமலை : திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டாரத்தில் சோளம் பெருமளவு சாகுபடி செய்யப்படுகிறது. பெரும்பாலும், அவை கால்நடை தீவனத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. சோளம் செயல் விளக்கத்திடல் அமைக்க முன்வரும் விவசாயிகளுக்கு, இடுபொருட்கள் வழங்கப்பட்டது.
உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட மாவட்ட ஆலோசகர் அரசப்பன் பேசியதாவது:
உடல் ஆரோக்கியத்துக்கு, சமச்சீர் உணவு உண்பது முக்கியம். அரிசி உணவுடன், புரதச்சத்து தரக்கூடிய பயறு வகைகள் மற்ற நம் உடம்புக்கு, நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய ஊட்டச்சத்து மிக்க தானியங்களான சோளம், கம்பு, ராகி, தினை, சாமை, வரகு, குதிரைவாலி ஆகியவற்றை உணவு பழக்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதனால், உடலுக்கு தேவையான தாது உப்புகள், வைட்டமின்கள் இயற்கையாகவே கிடைத்து, நோயின்றி வாழும் சூழ்நிலையை ஏற்படுத்திவிடுகிறது.
இவ்வாறு, அவர் பேசினார்.