/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒரு மாவட்டம்... 5 தொகுதி பரபரப்புக்கு பஞ்சமில்லை
/
ஒரு மாவட்டம்... 5 தொகுதி பரபரப்புக்கு பஞ்சமில்லை
ADDED : மார் 21, 2024 11:30 AM
பல்லடம்:ஐந்து லோக்சபா தொகுதிகளுடன், திருப்பூர் மாவட்டம் தேர்தலில் களம் காண உள்ளது.
திருப்பூர் மாவட்டம் கடந்த 2009ம் ஆண்டு உருவானது. மாவட்டத்துக்கு உட்பட்டு, தாராபுரம், காங்கேயம், உடுமலை, மடத்துக்குளம், அவிநாசி, பல்லடம், திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு ஆகிய, 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
மேலும்,  திருப்பூர், கோவை, ஈரோடு, பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய ஐந்து லோக்சபா தொகுதிகள் திருப்பூர் மாவட்டத்தில் அடங்கியுள்ளன. திருப்பூர் லோக்சபா தொகுதியின் கீழ் திருப்பூர் வடக்கு, தெற்கு; கோவை தொகுதியில் பல்லடம், ஈரோடு தொகுதியில் தாராபுரம், காங்கேயம், பொள்ளாச்சி தொகுதியில் உடுமலை, மடத்துக்குளம், நீலகிரி தொகுதியின் கீழ் அவிநாசி ஆகியவை இடம் பெற்றுள்ளன.
ஐந்து லோக்சபா தொகுதிகளில் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.,களே, திருப்பூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பர்.
தேர்தலை முன்னிட்டு, ஐந்து லோக்சபா தொகுதிக்கு  உட்பட்ட பகுதிகளிலும் அரசியல் கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் மாறி மாறி தேர்தல் பிரசாரம் செய்வார்கள் என்பதால், லோக்சபா தேர்தல் களம் திருப்பூர் மாவட்டத்தில் மிகவும் பரபரப்பாகவே காணப்படும்.

