/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'குட்கா' விற்றவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
/
'குட்கா' விற்றவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
ADDED : ஜூலை 10, 2024 12:19 AM
அவிநாசி:அவிநாசியில், புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடைக்கு, 'சீல்' வைக்கப்பட்டு, 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அவிநாசி போலீஸ் ஸ்டேஷன் எதிரில் உள்ள பல சரக்கு கடையை அப்துல்சமது 62, என்பவர் நடத்தி வருகிறார். இவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் கடையில் சோதனை செய்ததில், புகையிலை பொருட்களைப் பதுக்கி விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. இதனால், உணவு பாதுகாப்பு அலுவலர் ஸ்டாலின் பிரபு, பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் கருப்புசாமி, வருவாய் ஆய்வாளர் மகேஸ்வரி மற்றும் போலீசார் உணவு பாதுகாப்பு தர சட்டத்தின்படி, கடைக்கு 'சீல்' வைத்தனர்.
இவரது கடையில் இரண்டாவது முறையாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததால், உணவு பாதுகாப்பு தரச் சட்டத்தின் படி, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, 30 நாட்களுக்கு கடையை திறக்கக் கூடாது என 'சீல்' வைக்கப்பட்டது.