/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீ விபத்து
/
கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீ விபத்து
ADDED : ஜூலை 11, 2024 10:13 PM
திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
திருப்பூர், பல்லடம் ரோட்டில் கலெக்டர் அலுவலக வளாகம் அமைந்துள்ளது. இங்கு எஸ்.பி., அலுவலகம், மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் உள்ளிட்டவை அமைந்துள்ளன. பல்வேறு பணிகளுக்காக தினமும் மாவட்டம் முழுவதுமிலிருந்து நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் வருகின்றனர்.
இவற்றின் அருகில், மரம், செடிகள் நிறைந்து காணப்படுகிறது. இந்த இடத்தில், நேற்றுமுன்தினம் திடீரென தீப்பிடித்தது. அப்பகுதியில் புகை மண்டலம் சூழ்ந்தது. இதைக்கண்டவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்ததிருப்பூர் தெற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதன் காரணமாக பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. யாராவது தீவைத்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.
- நமது நிருபர் -

