/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மனைவியை அரிவாள்மனையால் தாக்கி தன்னையும் வெட்டி கொண்ட தொழிலாளி
/
மனைவியை அரிவாள்மனையால் தாக்கி தன்னையும் வெட்டி கொண்ட தொழிலாளி
மனைவியை அரிவாள்மனையால் தாக்கி தன்னையும் வெட்டி கொண்ட தொழிலாளி
மனைவியை அரிவாள்மனையால் தாக்கி தன்னையும் வெட்டி கொண்ட தொழிலாளி
ADDED : ஜூலை 12, 2024 12:36 AM
திருப்பூர் : மனைவியை அரிவாள்மனையால் தாக்கி, தன்னையும் தொழிலாளி வெட்டிக்கொண்டார்.
தாராபுரம், தேவநல்லுார், காங்கயம்பாளைத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி, 44; தொழிலாளி. இவரது மனைவி மருதாயி, 39. சமீபத்தில் திருமூர்த்திக்கு உடல் நலம் சரியில்லாமல், தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
கடந்த, 7ம் தேதி உடல்நலம் சரியான பின் வீட்டுக்கு திரும்பினார். டாக்டர்கள் அறிவுறுத்திய மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார்.
நேற்று முன்தினம், மருந்து, மாத்திரைகளை சரியான நேரத்தில் கொடுக்கவில்லையென்றும், நடத்தையில் சந்தேகப்பட்டும் மனைவியுடன் தகராறு செய்தார்.
அங்கிருந்த அரிவாள்மனையால் மனைவியைத் தாக்கி, தன்னையும் வெட்டி கொண்டார். காயமடைந்த, இருவரையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அலங்கியம் போலீசார் விசாரிக்கின்றனர்.