/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாளை மருத்துவ கருத்தரங்கு: கே.எம்.சி.எச்., நடத்துகிறது
/
நாளை மருத்துவ கருத்தரங்கு: கே.எம்.சி.எச்., நடத்துகிறது
நாளை மருத்துவ கருத்தரங்கு: கே.எம்.சி.எச்., நடத்துகிறது
நாளை மருத்துவ கருத்தரங்கு: கே.எம்.சி.எச்., நடத்துகிறது
ADDED : ஏப் 27, 2024 12:50 AM
திருப்பூர்;கே.எம்.சி.எச்., மருத்துவமனை சார்பில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கிராம மற்றும் புறநகர பகுதி மருத்துவர்களுக்காக 'மெடி அப்டேட்' கருத்தரங்கு நடத்தப்பட உள்ளது.
மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் தொடர்ந்து முன்னணி வகிக்கும் கே.எம்.சி.எச்., மருத்துவமனை தொடர் மருத்துவ கல்வி நிகழ்ச்சி, கருத்தரங்கம் மற்றும் பயிலரங்குகளை நடத்தி வருகிறது. இவற்றில் பல்வேறு இந்திய மற்றும் சர்வதேச மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று வருகின்றனர்.
அவ்வகையில், கே.எம்.சி.எச்., சூலுார் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில், நாளை (28-ம் தேதி) பல்லடம், எஸ்.ஜி.எஸ்., மஹாலில் மருத்துவக் கருத்தரங்கு நடக்கிறது.
காலை, 8:30க்கு துவங்கும் கருத்தரங்கில், 'அன்றாட மருத்துவ பயிற்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள்' எனும் தலைப்பில் கலந்துரையாடல் நடக்கிறது.
முன்பதிவுக்கு, 7339333485 என்ற மொபைல் எண்ணில் அழைக்கலாம்.