/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழந்தைகளைத் தற்காக்க புதிய விழிப்புணர்வு முயற்சி
/
குழந்தைகளைத் தற்காக்க புதிய விழிப்புணர்வு முயற்சி
குழந்தைகளைத் தற்காக்க புதிய விழிப்புணர்வு முயற்சி
குழந்தைகளைத் தற்காக்க புதிய விழிப்புணர்வு முயற்சி
ADDED : ஜூன் 01, 2024 11:09 PM

பள்ளிக் குழந்தைகள் பாலியல் சீண்டல் மற்றும் குற்றங்களுக்கு ஆளாவதை தடுக்க, 'உடல் மொழி' வாயிலாக, தங்களை தற்காத்துக் கொள்ளும் மனநிலையை பெறும் வகையில் புதிய முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
பாலியல் சீண்டல் மற்றும் குற்றங்களுக்கு, பள்ளிக் குழந்தைகள் ஆளாவது, அதிகரித்து வருகிறது. இப்பிரச்னையை கட்டுக்குள் கொண்டு வர, தடுக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் எதிர்பார்த்த பலன் தரவில்லை. இந்நிலையில், சென்னையை சேர்ந்த ஆசிரியர் பிரகாஷ் வைத்தியநாதன் என்பவர், பள்ளிக் குழந்தைகள் தினமும் பயன்படுத்தும், பென்சில் பாக்ஸ் மற்றும் ஜியாமெட்ரி பாக்ஸின் உட்புறத்தில், கார்ட்டூன் ஓவியங்கள் வாயிலாக, தொடுதல் உணர்வு தரும் 'உடல் மொழி' (ரியாக்ஷன்) அச்சிடப்பட்ட ஸ்டிக்கரை தயாரித்து, அதன் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சித்து வருகிறார்.
பாலியல் சீண்டல் விழிப்புணர்வு
பிரகாஷ் வைத்தியநாதன் கூறியதாவது:முதல் வகுப்பு துவங்கி, 8ம் வகுப்பு வரையிலான குழந்தைகள், எந்தவொரு விஷயத்தையும் புரிந்துகொள்ள சிரமப்படுகின்றனர். குறிப்பாக, தொடுதல் உணர்வு, பாலியல் சீண்டல் தொடர்பான விழிப்புணர்வு அவர்களிடம் இல்லை; இதனால், எளிதாக அவர்கள் ஏமாற்றப்படுகின்றனர். இது, அவர்களது பெற்றோருக்கு கூட தெரிவதில்லை. இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தொடுதல், மிரட்டுதல், பாலியல் ரீதியாக சீண்டுதல் போன்ற செயல்களின் போது, குழந்தைகளின் உடலில் ஏற்படும் மாற்றம், அதாவது, 'ரியாக்ஷனை' அவர்களுக்கு புரிய வைப்பதால், அவர்களால் விழிப்புணர்வு பெற முடியும்.
கார்ட்டூன் மனதில் பதியும்
உதாரணமாக, ஒரு குழந்தை நடக்க முடியாமல் சிரமப்படுவதாக உணர்ந்தால், அதை சாதாரணமாக கடந்து போகாமல், அக்குழந்தை ஏன் அப்படி நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி, தொடு உணர்வால் ஏற்படும் உடல் மொழி வாயிலாக, பாலியல் துன்புறுத்தலில் இருந்து குழந்தைகள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வை வழங்கவே இந்த முயற்சியை மேற்கொண்டேன். ஒரு குழந்தை தனது பென்சில் பாக்ஸ் அல்லது, ஜியாமெட்ரி பாக்ஸ் திறக்கும் போதெல்லாம், அந்த கார்ட்டூன் சித்திரம் அவர்கள் மனதில் பதியும்; அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும். பெற்றோர் கூட விழிப்புணர்வு பெற முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.
-----
பாலியல் சீண்டலின்போது உடலில் ஏற்படும் மாற்றம் குறித்த 'ரியாக்ஷனை' புரியவைக்கும் வகையில் ஜியாமெட்ரி பாக்ஸில் இடம்பெற்றுள்ள கார்ட்டூன்கள்.
---
பிரகாஷ் வைத்தியநாதன்
----
மனோகரன்