/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அறங்காவலர் நியமனம் ஒரு தரப்பினர் எதிர்ப்பு
/
அறங்காவலர் நியமனம் ஒரு தரப்பினர் எதிர்ப்பு
ADDED : ஆக 06, 2024 11:23 PM

அனுப்பர்பாளையம் : திருப்பூர், 15 வேலம்பாளையத்தில் ஸ்ரீ ராமலிங்கமூர்த்தி மற்றும் பர்வதவர்த்தினி உடனமர் ராம லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.
கோவிலுக்கு ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், அறங்காவலர் குழு உறுப்பினராக அதே பகுதியை சேர்ந்த முத்துகுமார், என்பவரை நியமித்துள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று கோவில் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
பொதுமக்கள் கூறுகையில், 'பரம்பரையாக கோவிலில் வழிபாடு நடத்தி வரும் மக்களிடம் கருத்து கேட்டு அறங்காவலர் குழுவை நியமனம் செய்ய வேண்டும்,' என்றனர். வேலம்பாளையம் போலீசார் பேச்சு நடத்தி, கோரிக்கையை மனுவாக மாவட்ட நிர்வாகத்திடம் வழங்குமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். அறங்காவலர் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள முத்துகுமார் கூறுகையில், ''நான் நேர்மையான முறையில் நடந்துள்ளேன். அறநிலைய துறையிடமிருந்து ஆணை கிடைக்கப்பெற்றவுடன் முறைப்படி பொறுப்பேற்பேன்,'' என்றார்.