/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பஞ்சர்' ஆன பிரதான போக்குவரத்து ரோடு; அதிகரிக்கும் விபத்துகள்
/
'பஞ்சர்' ஆன பிரதான போக்குவரத்து ரோடு; அதிகரிக்கும் விபத்துகள்
'பஞ்சர்' ஆன பிரதான போக்குவரத்து ரோடு; அதிகரிக்கும் விபத்துகள்
'பஞ்சர்' ஆன பிரதான போக்குவரத்து ரோடு; அதிகரிக்கும் விபத்துகள்
ADDED : ஆக 12, 2024 01:37 AM

உடுமலை;உடுமலையில், கிராமங்களுக்கு செல்லும் பிரதான ரோடு குண்டும், குழியுமாக மாறியுள்ளதால், பொதுமக்கள் பாதித்து வருகின்றனர்.
உடுமலை முக்கோணத்திலிருந்து, வேலுார், வாளவாடி, தளி, திருமூர்த்திமலை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பிரதான வழித்தடமாக, முக்கோணம் - திருமூர்த்திமலை ரோடு உள்ளது.
ஊரக வளர்ச்சித்துறை சார்பில், கிராம இணைப்புச்சாலையாக அமைக்கப்பட்டு, பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ளது.
இந்த வழித்தடத்தில் உள்ள கிராமங்களுக்கு மட்டுமன்றி, விவசாய நிலங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கோவை, பொள்ளாச்சி பகுதிகளிலிருந்து, திருமூர்த்திமலை, அமராவதி அணை உள்ளிட்ட சுற்றுலா மையங்களுக்கு செல்லும் மக்களும் இந்த ரோட்டை பயன்படுத்தி வருகின்றனர்.
பஸ்கள், சுற்றுலா வாகனங்கள், தொழிற்சாலைகளுக்கு பயன்படும் கன ரக வாகனங்கள் என தினமும், நுாற்றுக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தி வரும் இந்த ரோட்டில், பல இடங்களில் ரோடு குண்டும், குழியுமாக மாறியுள்ளது.
ஒரு சில இடங்களில், முற்றிலும் ரோடு சிதிலமடைந்துள்ளது. இதனால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு, உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
ஏராளமான கிராமங்களுக்கும், சுற்றுலா மையமான திருமூர்த்திமலைக்கு செல்லும் பிரதான வழித்தடமாக உள்ள இந்த ரோட்டை உடனடியாக புதுப்பிக்கவும், அதிகளவு வாகன போக்குவரத்தை கருத்தில் கொண்டு அகலப்படுத்தவும் வேண்டும்.