/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சித்திரை கனியை வரவேற்க பூத்துக்குலுங்கும் சரக்கொன்றை
/
சித்திரை கனியை வரவேற்க பூத்துக்குலுங்கும் சரக்கொன்றை
சித்திரை கனியை வரவேற்க பூத்துக்குலுங்கும் சரக்கொன்றை
சித்திரை கனியை வரவேற்க பூத்துக்குலுங்கும் சரக்கொன்றை
ADDED : ஏப் 09, 2024 11:11 PM

திருப்பூர்;சித்திரைக்கனி விழாவை வரவேற்கும் விதமாக, திருப்பூர் பகுதிகளில், மஞ்சள் சரங்கொன்றை மலர்கள் கொத்து கொத்தாக மலர்ந்துள்ளன.
தமிழ்ப்புத்தாண்டு சித்திரை 1 ம் தேதி பிறக்கிறது. தமிழ்ப்புத்தாண்டாக மட்டுமல்ல, சித்திரைக்கனி விழாவாகவும், பக்தர்கள் கொண்டாடுவது வழக்கம். அதன்படி, வீடுகளில் பலவகைகளை தட்டில் வைத்து, வெற்றிலைபாக்கு நாணங்கள், ரூபாய் நோட்டுக்களை வைத்து, அதிகாலையில் கண் விழித்ததும் அவற்றை பார்த்து வணங்குவது வழக்கம்.
குறிப்பாக, மங்களத்தின் அடையாளமாக, மஞ்சள் சரங்கொன்றை மலர்களை பழத்தட்டில் வைப்பதும், பூஜை அறைகளில் வைப்பதும் சிறப்பானது. கோடை வெயில் கொளுத்தி கொண்டிருந்தாலும், கண்ணுக்கு குளிர்ச்சியாக மஞ்சள் சரங்கொன்றை மலர்கள், கொத்துக்கொத்தாய் மலர்ந்துள்ளன.
திருப்பூர் நகரப்பகுதியில் வளர்க்கும் சரங்கொன்றை மரத்தில், கடந்த ஒரு வாரமாக மஞ்சள் நிற பூக்கள் கொத்துக்கொத்தாக மலர்ந்து மணம் பரப்பிக்கொண்டிருக்கின்றன.

