/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் ஒரு ஆண்டாக ஒளிராத தெருவிளக்கு
/
தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் ஒரு ஆண்டாக ஒளிராத தெருவிளக்கு
தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் ஒரு ஆண்டாக ஒளிராத தெருவிளக்கு
தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் ஒரு ஆண்டாக ஒளிராத தெருவிளக்கு
ADDED : ஜூன் 27, 2024 11:25 PM

பல்லடம் : பல்லடம், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சந்திப்பில், ஓராண்டாக தெருவிளக்கு எரியாததால், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.
வாகன போக்குவரத்து நிறைந்த தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், மதுரை, பொள்ளாச்சி, உடுமலை, அவிநாசி, கொச்சி உள்ளிட்ட மாநில நெடுஞ்சாலைகள் இணைகின்றன. முக்கிய சாலை செல்லும் சந்திப்பில், உயர் கோபுர விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
இவற்றில், பெரும்பாலான விளக்குகள் அவ்வப்போது எரிவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இவ்வாறு, தேசிய நெடுஞ்சாலையுடன் கொசவம்பாளையம் ரோடு சந்திக்கும் இடத்தில் உள்ள தெரு விளக்கு கடந்த ஓராண்டாக எரியாமல் உள்ளது.
கொசவம்பாளையம் ரோடு பிரிவில், மேற்கு பல்லடம் வந்து செல்லும் வாகனங்கள் மட்டுமன்றி, தேசிய நெடுஞ்சாலையில, 'யு டர்ன்' எடுக்கும் வாகனங்களும் அதிகம். இதன் காரணமாக, இந்த சந்திப்பு பகுதி எப்போதும் வாகன போக்குவரத்து நிறைந்து காணப்படும்.
இங்குள்ள தெருவிளக்கு ஓராண்டாக எரியாததால், இருள் சூழ்ந்து விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.