/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீகாமாட்சியம்மன் கோவிலில் பிரமிக்க வைத்த நாட்டிய நாடகம்
/
ஸ்ரீகாமாட்சியம்மன் கோவிலில் பிரமிக்க வைத்த நாட்டிய நாடகம்
ஸ்ரீகாமாட்சியம்மன் கோவிலில் பிரமிக்க வைத்த நாட்டிய நாடகம்
ஸ்ரீகாமாட்சியம்மன் கோவிலில் பிரமிக்க வைத்த நாட்டிய நாடகம்
ADDED : ஜூலை 01, 2024 02:05 AM
திருப்பூர்;நாட்டிய இசை கலைஞர்களை ஊக்குவிக்கவும், இளம் கலைஞர்களை உருவாக்கும் முயற்சியாக, மாதம்தோறும், திருப்பூர் சாய் கிருஷ்ணா நுண்கலைக்கூட்டம் சார்பில், ஒவ்வொரு இடத்தை தேர்வு செய்து, நாட்டிய நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
கலை விழிப்புணர்வு பயணம் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இரண்டாவது ஆண்டு துவக்கமாக, திருப்பூர் ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் நேற்று, சிறப்பு நாட்டிய நடன நிகழ்ச்சி நடந்தது. காட்டுவளவு ஸ்ரீகாமாட்சியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா முடிந்து, மண்டலாபிேஷகம் நடந்து வருகிறது.
சாய் கிருஷ்ணா நுண்கலைக்கூடம் சார்பில், காமாட்சியம்மன் வரலாறு தொடர்பான நாட்டிய நடன நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதுகுறித்து சாய் கிருஷ்ணா நுண்கலைக்கூட நிர்வாகி சந்தியா கூறுகையில், ''ஸ்ரீபஸ்வந்த் உபத்யாயா, ஸ்ரீஸ்ருதி கோபால், ஆதித்யா ஆகியோரது வழிகாட்டுதலுடன், ஸ்ரீகாமாட்சியம்மன் வரலாறு நாட்டிய நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. பெங்களூருவை சேர்ந்த நாட்டிய பேராசிரியர் சுவின் பிரசாத், ஸ்ரீகாமாட்சியம்மன் வரலாறுகளை விளக்கும் வகையில், பரத நாட்டியமாடியது, அனைவரின் வரவேற்பை பெற்றுள்ளது, '' என்றார்.