/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய நெடுஞ்சாலையில் 'டோல்கேட்' அமைகிறது
/
தேசிய நெடுஞ்சாலையில் 'டோல்கேட்' அமைகிறது
ADDED : செப் 01, 2024 01:44 AM

பல்லடம்;பல்லடம் -- வெள்ளகோவில் வரையிலான தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி, கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கியது. விரிவாக்க பணிகள் நிறைவடைந்த இடங்களில், மையத் தடுப்புகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையே, பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் பகுதியில், புதிதாக 'டோல் கேட்' அமைக்கும் பணி துவங்கி நடந்து வருவதாக கூறப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலை, இருவழிச்சாலையாக இருந்த காலகட்டத்தில், 'டோல் கேட்' அமைக்கப்பட்டது. விவசாயிகள், பொதுமக்கள் பலரின் எதிர்ப்பைத் தொடர்ந்து, மூடப்பட்டது. அதன்பின், பல ஆண்டுகளாக டோல்கேட் பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்டது. ரோடு விரிவாக்க பணி துவங்கிய போதே, பழைய டோல் கேட் கட்டுமானங்கள் இடித்து அகற்றப்பட்டன தற்போது, மீண்டும் அதே இடத்தில், புதிதாக டோல்கேட் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

