/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வட மாநில தொழிலாளருக்கு உதவ ஒருங்கிணைந்த மையம் தேவை
/
வட மாநில தொழிலாளருக்கு உதவ ஒருங்கிணைந்த மையம் தேவை
வட மாநில தொழிலாளருக்கு உதவ ஒருங்கிணைந்த மையம் தேவை
வட மாநில தொழிலாளருக்கு உதவ ஒருங்கிணைந்த மையம் தேவை
ADDED : ஆக 25, 2024 12:14 AM
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், 21 மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
பீஹார், ஒடிசா போன்ற மாநிலங்கள் அங்கேயே, தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. பயிற்சி நிறைவு பெறும் தொழிலாளர்கள், அம்மாநில அரசு வழிகாட்டுதலுடன், திருப்பூர் போன்ற பிறமாநில தொழில் நகர்களுக்கு செல்கின்றனர். அதற்கு பிறகும், வடமாநில தொழிலாளர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர்.
ஒவ்வொரு தொழிலாளர் பணிபுரியும் விவரத்தை, வடமாநில அரசுகளும் கண்காணிக்கின்றன. இருப்பினும், திருப்பூரில் இருந்து சொந்த ஊர் செல்லும் போது, தொழிலாளர்களுடன் சிலர் எவ்வித பயிற்சியும் இல்லாமல், தன்னிச்சையாக பணிக்கு வருகின்றனர்.
ஒடிசா மாநில உதவி மைய முன்னாள் பொறுப்பாளர் ராமசாமி கூறியதாவது:
அரசு பயிற்சி மையங்களில், முறையாக பயிற்சி பெற்று வருவோர், பாதுகாப்பாக பணியாற்றலாம். தன்னிச்சையாக வருவோர், கூட்டமாக இருந்தால் பிரச்னை இல்லை; தனியே இருந்தால், உரிய பாதுகாப்பு கிடைக்காது. அதிகாரப்பூர்வமாக அனுப்பி வைக்கப்படும் தொழிலாளர் நலனுக்காக உதவி மையங்களும் உள்ளன.
இங்கிருந்து, சம்பந்தப்பட்ட மாநிலத்தில், மாவட்ட கலெக்டர்களுக்கு நேரடியாக தகவல் அளிப்போம். தன்னிச்சையாக வரும் தொழிலாளர்கள், உதவி மையத்தை நாடினால் தேவையான உதவி பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வடமாநில தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக ஒருங்கிணைந்த உதவி மையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

