/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளாஸ்டிக் குப்பைகளால் மாயமாகும் நீர் வழித்தடம்
/
பிளாஸ்டிக் குப்பைகளால் மாயமாகும் நீர் வழித்தடம்
ADDED : மே 24, 2024 12:14 AM

பொங்கலுார்;பொங்கலுார் ஒன்றியம், வேலம்பட்டியில் உற்பத்தியாகும் சிறிய ஓடையானது கோவில்பாளையம், அவிநாசி பாளையம், நாகலிங்கபுரம் வழியாகச் சென்று கொடுவாய்க்குத் தெற்கே நிழலிக்கரையில் கலக்கிறது. பின் பெரும் ஓடையாக உருவெடுத்து அமராவதி ஆற்றில் கலக்கிறது.
இதன் நீர்வழித்தடம் பல இடங்களில் ஆக்கிரமிப்பில் உள்ளது. கோவில்பாளையம் அருகே தனியார் நிலத்தின் வழியாக செல்லும் நீர்வழிப் பாதை வீட்டு மனைகளாக உருமாறி உள்ளது. நாகலிங்கபுரத்தில் நீர்வழித்தடத்தில் வீடு கட்டப்பட்டுள்ளது. நாகலிங்கபுரம் குளத்திலிருந்து தண்ணீர் வெளியேறும் பகுதியில் கொடுவாய் நகரில் சேகரிக்கப்படும் பெரும்பாலான பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப் படுகின்றன.
இதனால் தண்ணீர் செல்வது தடைபடும் அபாயம் உள்ளது. மேலும் கழிவுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டால் அருகில் உள்ள குளங்களுக்கு பெரும் அழிவு ஏற்படும். கொடுவாய் பகுதியில் கொட்டப்படும் பெரும்பாலான குப்பைகள் ஊராட்சிக்குத் தெரிந்தே கொட்டப்படுகிறது. குப்பைகளை அகற்றி குளத்தை பாதுகாக்க வேண்டிய ஊராட்சி நிர்வாகம், அதனை கண்டு கொள்ளாமல் இருப்பது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.