/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இதய அறுவைசிகிச்சைக்குபின்னும் விளையாட்டில் சாதித்த பெண்மணி
/
இதய அறுவைசிகிச்சைக்குபின்னும் விளையாட்டில் சாதித்த பெண்மணி
இதய அறுவைசிகிச்சைக்குபின்னும் விளையாட்டில் சாதித்த பெண்மணி
இதய அறுவைசிகிச்சைக்குபின்னும் விளையாட்டில் சாதித்த பெண்மணி
ADDED : ஆக 28, 2024 11:38 PM

'சாதனைக்கு வயது ஒரு தடையல்ல' என்று கூறுகிறார், மூத்தோர் தடகளத்தில் அசத்தும், 'வெட்ரன்ஸ்' சங்கத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளர் சுமதி. சமீபத்தில் இலங்கையில் நடந்த சர்வதேச விளையாட்டுப் போட்டியில், திருப்பூரில் இருந்து சென்ற முதல் மூத்தோர் தடகள வீரர் என்ற பெருமையை பெற்ற சுமதி, 55 வயது எடைப்பிரிவில், சங்கிலி குண்டெறிதல், வட்டெறிதலில் தங்கம்; குண்டெறிதலில் வெண்கலம் வென்றார்.
அவர் கூறுகையில் ''கடந்த, 23 ஆண்டுகளாக ேஹமர் த்ரோ, தட்டெறிதல், குண்டெறிதல் விளையாட்டில் ஈடுபட்டு வருகிறேன். திருப்பூர் மாவட்டம் உதயமான போது, வெறும், 5 பேரை உறுப்பினராக கொண்டு, 'வெட்ரன்ஸ்' சங்கம் துவங்கினேன். இன்று, 300 பேர் வரை உறுப்பினர்களாக, பயிற்சி பெற்றும், போட்டிகளில் பங்கெடுத்தும் வருகின்றனர்.
கடந்த, 10 ஆண்டுக்கு முன் இதய அறுவை சிகிச்சை செய்த பின்பும், தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு, போட்டிகளில் பங்கெடுத்து வருகிறேன். இதன் மூலம், உடல், மனம் வலுவாக இருக்கிறது. அக்., 10ம் தேதி, மலேஷியாவில் நடக்கும் வெட்ரன்ஸ் அதலெடிக் போட்டியில் பங்கேற்க தயாராகி வருகிறேன். உடுமலையில் இருந்து, மனோகர் என்பவரும் அந்த போட்டியில் பங்கேற்க உள்ளார். இதுபோன்ற போட்டிகளில் அவரவர் சொந்த செலவிலேயே பங்கேற்கின்றனர். சாதனைக்கு வயது ஒரு தடையல்ல'' என்றார்.

