/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கைவிடப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை மீட்பு
/
கைவிடப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை மீட்பு
ADDED : மே 09, 2024 04:15 AM
திருப்பூர் : அவிநாசி - பெருமாநல்லுார் ரோட்டில், பழங்கரை மேம்பாலத்தின் கீழ், கடந்த ஏப்ரல் 15ம் தேதி, பச்சிளம் பெண் குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாக, போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
குழந்தையை மீட்ட போலீசார், 108 ஆம்புலன்சில், திருப்பூர் பெரிச்சிபாளையம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள், உடல் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்து, மகிழினி என பெயர் சூட்டி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர்களிடம் ஒப்படைத்தனர்.
குழந்தைகள் நலக்குழுவில் முன்னிலை படுத்தப்பட்ட குழந்தை, கடந்த 2ம் தேதி, கிணத்துக்கடவில் உள்ள சரணாலயம் தத்து வளமையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த குழந்தைகுறித்து தகவல் தெரிந்தவர்கள், 30 நாளுக்கும், கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை, 0421 2971198; குழந் தைகள் நலக்குழுவை, 0421 2424416; சரணாலயம் தத்துவள மையத்தை 9003 91966, 73738 48341 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
யாரும் தொடர்புகொள்ளாத பட்சத்தில், சட்டப்படி குழந்தை தத்து கொடுக்கப்படும் என, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜசேகர் அறிவித்துள்ளார்.