/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முத்துார் விவேகானந்தா பள்ளி :பிளஸ் 2 தேர்ச்சியில் சாதனை
/
முத்துார் விவேகானந்தா பள்ளி :பிளஸ் 2 தேர்ச்சியில் சாதனை
முத்துார் விவேகானந்தா பள்ளி :பிளஸ் 2 தேர்ச்சியில் சாதனை
முத்துார் விவேகானந்தா பள்ளி :பிளஸ் 2 தேர்ச்சியில் சாதனை
ADDED : மே 06, 2024 11:39 PM

திருப்பூர்;முத்துார், விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர், பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாநில அளவில் சாதனை படைத்துள்ளனர்.
இப்பள்ளி மாணவி சுகிதா, தமிழ் - 98, ஆங்கியம் - 95, கணிதம் - 98, இயற்பியல் - 97, வேதியியல் - 100, உயிரியல் - 99 என, 600க்கு, 587 மதிப்பெண் பெற்றுள்ளார்.
மாணவன் சிவபாரதி, தமிழ் - 97, ஆங்கிலம் - 93, கணிதம் - 99, இயற்பியல் - 100, வேதியியல் - 100, உயிரியல் - 97 என, 600க்கு 586 மதிப்பெண்களுடன் இரண்டாமிடம் பெற்றுள்ளார்.
மாணவி நிஷா, 585 மதிப்பெண் பெற்றுள்ளார். மேலும், ஐந்து மாணவ, மாணவியர், 580க்கு அதிகமாகவும், 10 பேர் 570க்கு அதிகமாகவும், 15 பேர், 560க்கு அதிகமாகவும், 21 பேர் 550க்கு அதிகமாகவும், 57 பேர், 500க்கு அதிகமாகவும் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மேலும், 25 மாணவ, மாணவியர், 100க்கு 100 மதிப்பெண் பெற்று சாதித்துள்ளனர். பள்ளியில் நேற்று நடந்த பாராட்டு விழாவில், தாளாளர் சண்முகம் தலைமை வகித்தார். முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு கேடயம், பாராட்டு சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
பள்ளியின் செயலாளர் சக்திவேல், நிர்வாக இயக்குனர் அசோக்குமார், முதல்வர் நடராஜ் ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவியர் பெற்றோர் பங்கேற்றனர். தலைமை ஆசிரியர் பத்மபிரியா நன்றி கூறினார்.