/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
10ம் வகுப்பு தேர்ச்சியில் 'மெரிட்' காட்டிய சாதனை
/
10ம் வகுப்பு தேர்ச்சியில் 'மெரிட்' காட்டிய சாதனை
ADDED : மே 11, 2024 11:53 PM

திருப்பூர் : கொடுவாயில் உள்ள மெரிட் மெட்ரிக் பள்ளியில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவ, மாணவியர், நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
இப்பள்ளி மாணவி யாழினி, 495 மதிப்பெண் பெற்று முதலிடம், புகலேஷ், 493 மதிப்பெண் பெற்று, இரண்டாமிடம், கனிஷ்கா, 491 மூன்றாமிடம், ரிதன்யா, சதுர்மிதா, 490 மதிப்பெண் பெற்று நான்காமிடம் பெற்றனர். அறிவியல் பாடத்தில் ஏழு மாணவர்களும், கணிதத்தில், மூன்று பேர், சமூக அறிவியலில் ஒருவரும் நுாறு மதிப்பெண் பெற்றனர். தேர்வெழுதிய மாணவர்களில், 490க்கும் மேல், 5 மாணவர்களும், 480க்கு மேல், 14 மாணவர்களும், 400க்கு மேல், 42 மாணவர்களும் மதிப்பெண்களை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
பிளஸ்2 தேர்வில், பொறியியல் படிப்புக்கான 'கட் ஆப்' மதிப்பெண் முறையே மாணவி ரெஷ்மி (196.5), அக் ஷயா (191) மற்றும் லோக்கேஷ்வர் (184) பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்த, ஆசிரியர்களையும், பள்ளி தலைவர், தாளாளர் மற்றும் பள்ளி முதல்வர் ஆகியோர் பாராட்டினர்.