ADDED : ஆக 25, 2024 10:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி, கிழக்கு ரத வீதி, சந்திப்பில், வாகனங்கள் பார்க்கிங் விதிகளுக்கு மாறாக இடையூறாக நிறுத்தப்பட்டிருந்தது. 'தினமலர்' நாளிதழ் செய்தியை தொடர்ந்து அவ்விடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
- சந்திரமோகன், கிழக்கு ரத வீதி.
குழாய் உடைப்பு சீரமைப்பு
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.ஆர்.சி., மில் ஸ்டாப்பில் குழாய் உடைந்து தண்ணீர் வீணானது. மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை மூலம் குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டுள்ளது.
- சங்கர்சதீஷ், அணைக்காடு.
சீரானது சாலை
திருப்பூர், ரயில்வே ஸ்டேஷன் அருகே, சபாபதிபுரம் சுரங்க பாலத்தில் சாலை சேதமாகியது குறித்து செய்தி வெளியிடப்பட்டது. மாநகராட்சி மூலம் சரிசெய்யப்பட்டு விட்டது.
- ராகவமூர்த்தி, சபாபதிபுரம்

