/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அதிரடி காட்டிய போலீஸ் கமிஷனர் இன்ஸ்பெக்டர் - எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம்: மதுவிலக்கு பிரிவு கூண்டோடு 'துாக்கியடிப்பு'
/
அதிரடி காட்டிய போலீஸ் கமிஷனர் இன்ஸ்பெக்டர் - எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம்: மதுவிலக்கு பிரிவு கூண்டோடு 'துாக்கியடிப்பு'
அதிரடி காட்டிய போலீஸ் கமிஷனர் இன்ஸ்பெக்டர் - எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம்: மதுவிலக்கு பிரிவு கூண்டோடு 'துாக்கியடிப்பு'
அதிரடி காட்டிய போலீஸ் கமிஷனர் இன்ஸ்பெக்டர் - எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம்: மதுவிலக்கு பிரிவு கூண்டோடு 'துாக்கியடிப்பு'
ADDED : செப் 13, 2024 03:40 AM

திருப்பூர் : திருப்பூர் மாநகரில் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்களை இடமாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். அதில், மதுவிலக்கு பிரிவில் போலீசார் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாநகர போலீஸ் ஸ்டேஷன்களில், இரண்டு ஆண்டுகளை கடந்த போலீசார், ஒரே ஸ்டேஷனில் நீண்ட ஆண்டுகளாக உள்ளவர்கள், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் என்ற வகையில், சமீபத்தில் பட்டியல் எடுக்கப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி காரணமாக இடமாற்றம் செய்யப்படாமல் இருந்தது. தற்போது, இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., உள்ளிட்டோரை கமிஷனர் லட்சுமி இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
அதில், மாநகர மதுவிலக்கு பிரிவில் எஸ்.எஸ்.ஐ., மற்றும் போலீசார் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
6 இன்ஸ்பெக்டர் மாற்றம்
வடக்கு இன்ஸ்பெக்டர் உதயகுமார், தெற்கு குற்றப்பிரிவுக்கும், அங்கிருந்த ஹரிகிருஷ்ணன் வடக்குக்கும், வேலம்பாளையம் தாமோதரன், மத்திய குற்றப்பிரிவுக்கும், அங்கிருந்த பிரேமா, வேலம்பாளையத்துக்கும், சிறப்பு நுண்ணறிவு பிரிவு கணேசன், நுண்ணறிவு பிரிவுக்கும், அங்கிருந்த பிரகாஷ் சிறப்பு நுண்ணறிவு பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
கே.வி.ஆர்., நகர் போக்குவரத்து எஸ்.ஐ., ராஜாங்கம், ஆயுதப்படைக்கும், கொங்கு நகர் ரமேஷ், ஆயுதப்படைக்கும், அங்கிருந்த செல்லப்பாண்டி, கொங்கு நகருக்கும், கண்ணன், கே.வி.ஆர்., நகருக்கும் மாற்றப்பட்டனர். தொடர்ந்து, வேலம்பாளையம் வனிதா, வடக்கு குற்றப்பிரிவு பொன்மணி, கொங்குநகர் மகளிர் கண்ணகி, அனுப்பர்பாளையம் போக்குவரத்து கவிதா, திருமுருகன்பூண்டி ஸ்டாலின், வேலம்பாளையம் அன்புமதி, கே.வி.ஆர்., நகர் போக்குவரத்து வைதேகி, வீரபாண்டி முருகம்பெருமாள் ஆகியோர் மாநகர மதுவிலக்கு பிரிவுக்கு மாற்றப்பட்டனர்.
மதுவிலக்கு பிரிவு
மதுவிலக்கில் இருந்த எஸ்.எஸ்.ஐ., கிரிஜா, அனுப்பர்பாளையத்துக்கும், வனஜா, வடக்கு குற்றப்பிரிவுக்கும், கென்னடி திருமுருகன்பூண்டிக்கும், ராமானிதா, கொங்கு நகர் மகளிருக்கும், போலீஸ் ஏட்டு சரவணன், திருமுருகன்பூண்டிக்கும், சுரேஷ் கே.வி.ஆர்., நகர் போக்குவரத்து, முகமது சபி, வீரபாண்டிக்கும், சரண்யா, தெற்கு ஸ்டேஷனுக்கும் மற்றும் ஆயுதப்படையை சேர்ந்த போலீஸ் ராஜ்குமார், கே.வி.ஆர்., நகர் போக்குவரத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
நுண்ணறிவு பிரிவு
திருப்பூர் வடக்கு நுண்ணறிவு (ஐ.எஸ்.,) பிரிவு நல்லதம்பி, சென்ட்ரல் ஸ்டேஷனுக்கும், அங்கிருந்த ரமேஷ், வடக்கு ஸ்டேஷனுக்கு, ஸ்டேஷன் டியூட்டிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவ்விருவருக்கு பதிலாக, வடக்கு ஸ்டேஷனுக்கு எஸ்.எஸ்.ஐ., கணேஷ்பாண்டியன், மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றிய குமாரவேல், சென்ட்ரல் ஸ்டேஷனுக்கும், (ஐ.எஸ்.,), கன்ட்ரோல் ரூம் மருதுபாண்டியன், ஆவண காப்பகத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.