/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓட்டு எண்ணிக்கை மையத்தில் 'ஸ்டாண்ட் பை' முறையில் கூடுதல் கேமரா
/
ஓட்டு எண்ணிக்கை மையத்தில் 'ஸ்டாண்ட் பை' முறையில் கூடுதல் கேமரா
ஓட்டு எண்ணிக்கை மையத்தில் 'ஸ்டாண்ட் பை' முறையில் கூடுதல் கேமரா
ஓட்டு எண்ணிக்கை மையத்தில் 'ஸ்டாண்ட் பை' முறையில் கூடுதல் கேமரா
ADDED : மே 04, 2024 11:51 PM
திருப்பூர்;திடீர் பழுது ஏற்பட்டாலும், கண்காணிப்பு தடைபடாமல் தொடர வேண்டும் என்பதற்காக, 'ஸ்டாண்ட் பை' முறையில், கூடுதல் கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக, தேர்தல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் லோக்சபா தொகுதியில், ஓட்டுப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள், எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் வைக்கப்பட்டுள்ளன. ஆறு சட்டசபை தொகுதிகளுக்கு, தனித்தனி 'ஸ்ட்ராங் ரூம்' அமைத்து, போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. கோபி, அந்தியூர் தொகுதிகளில் மட்டும், தலா இரண்டு 'ஸ்ட்ராங் ரூம்'கள் அமைக்கப்பட்டுள்ளன.
கல்லுாரி வளாகம், 'சிசிடிவி' கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்படுகின்றன. 'ஸ்ட்ராங் ரூமில்' மெஷின்கள் வைக்கப்பட்ட இரண்டாவது நாளிலேயே, 'சிசிடிவி' கேமராக்கள் இயங்காமல் பரபரப்பு ஏற்பட்டது. கோபி, அந்தியூர் தொகுதிகளில் இருந்த 'சிசிடிவி' கேமராக்கள், 20 நிமிடம் இயங்கவில்லை.
அதனை தொடர்ந்து, பல்வேறு தொகுதிகளிலும், 'சிசிடிவி' கேமராக்கள் இயங்காமல், 'மக்கர்' செய்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, தமிழகத்தில் உள்ள, 39 தொகுதிகளுக்கான எண்ணிக்கை மையங்களிலும் கூடுதல் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்த, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது:
பல்வேறு தொகுதிகளில், 'சிசிடிவி' கேமராக்கள் பழுதாகியதால், பரபரப்பு ஏற்பட்டது. 2 ஸ்ட்ராங் ரூம்'களுக்குள், நான்கு திசைகளில் இருந்தும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. வெளியே, 'ஸ்ட்ராங் ரூம்' கதவு மற்றும் முன்பகுதி தெரியும் வகையில், கேமரா பொருத்தியுள்ளோம்.
தற்போது, 'ஸ்டாண்ட் பை' முறைப்படி, கதவு மற்றும் முன்பதிவு தெரியும் வகையில், கூடுதலாக இரண்டு கேமரா பொருத்தப்பட்டுள்ளது; கூடுதல் 'டிவி'களும் வைத்து, வீடியோ பதிவு கண்காணிக்கப்படுகிறது. ஒரு கேமரா திடீரென பழுதானாலும், மற்றொன்றில் தொடர்ந்து கண்காணிக்கும் வகையில், கூடுதல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.