/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கேன்சர் சிகிச்சை மையத்துக்குகூடுதலாக ரூ.5 லட்சம் நன்கொடை
/
கேன்சர் சிகிச்சை மையத்துக்குகூடுதலாக ரூ.5 லட்சம் நன்கொடை
கேன்சர் சிகிச்சை மையத்துக்குகூடுதலாக ரூ.5 லட்சம் நன்கொடை
கேன்சர் சிகிச்சை மையத்துக்குகூடுதலாக ரூ.5 லட்சம் நன்கொடை
ADDED : மார் 29, 2024 12:53 AM
திருப்பூர்;திருப்பூர் கேன்சர் சிகிச்சை மையத்துக்கு, பிருத்வி உள்ளாடை நிறுவனத்தினர், கூடுதலாக, 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளனர்.
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், 'நமக்கு நாமே திட்டத்தின்' கீழ் ரோட்டரி சங்கம் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன், 90 கோடி ரூபாய் மதிப்பில் கேன்சர் நோய் மருத்துவமனை கட்டும் பணி துவங்கியுள்ளது. இதில், பொதுமக்களின் பங்களிப்பாக, 30 கோடி ரூபாய் திரட்டப்பட்டு, அரசுக்கு வழங்க வேண்டும்.
ரோட்டரி சங்கத்தினர், பல்வேறு தன்னார்வ அமைப்பினர், தொழில் துறையினர் என பலரும் பங்களிப்பு தொகை செலுத்தி வருகின்றனர்.
இதில், பிருத்வி உள்ளாடை தயாரிப்பு நிறுவனத்தினர், தங்களின் பங்களிப்பு தொகையாக ஏற்கனவே, 25 லட்சம் ரூபாய் கொடுத்திருந்த நிலையில், நேற்று, கூடுதலாக, 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கினர்.
அதன் உரிமையாளர் பிருத்வி பாலன், பங்களிப்பு தொகைக்கான காசோலையை வழங்க, திருப்பூர் ரோட்டரி பொது நல அறக்கட்டளை தலைவர் டாக்டர் முருகநாதன் பெற்றுக் கொண்டார்.
முருகநாதன் கூறுகையில், ''அதிநவீன கதிர்வீச்சு வழங்கும் கருவி, ரோபோடிக் சர்ஜரி உள்ளிட்ட அனைத்து வகையான கருவிகளையும் கொண்டு உருவாக்கப்பட உள்ள இந்த கேன்சர் சிகிச்சை மையத்தின் வாயிலாக, கேன்சர் நோய், ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படும் பட்சத்தில், குணப்படுத்தி விட முடியும்.
அரசுக்கு, பங்களிப்பு தொகையாக செலுத்தப்பட வேண்டிய, 30 கோடி ரூபாயில், இதுவரை, 19 கோடி ரூபாய் அளவுக்கு நிதி வசூலிக்கப்பட்டுள்ளது. பங்களிப்பு தொகை வழங்குவோர், அணுகலாம்'' என்றார்.

