/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எர்ணாகுளம் - பிலாஸ்பூர் ரயிலில் கூடுதல் பொதுப்பெட்டி
/
எர்ணாகுளம் - பிலாஸ்பூர் ரயிலில் கூடுதல் பொதுப்பெட்டி
எர்ணாகுளம் - பிலாஸ்பூர் ரயிலில் கூடுதல் பொதுப்பெட்டி
எர்ணாகுளம் - பிலாஸ்பூர் ரயிலில் கூடுதல் பொதுப்பெட்டி
ADDED : ஆக 02, 2024 12:58 AM
திருப்பூர்:பயணிகள் வசதிக்காக பிலாஸ்பூர் - எர்ணாகுளம் சூப்பர் பாஸ்ட் ரயிலில், ஏ.சி., பெட்டி குறைக்கப்பட்டு, பொது பெட்டி சேர்க்கப்படுகிறது.
அதிகரிக்கும் ரயில் பயணிகள் எண்ணிக்கைக்காக, தென்கிழக்கு ரயில்வே, சூப்பர்பாஸ்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளில் மாற்றங்களை செய்து வருகிறது. கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் இருந்து ஹிமாசலப் பிரதேசம், பிலாஸ்பூருக்கு இயக்கப்படும் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் (எண்: 22815) ஏ.சி., முதல் வகுப்பு பெட்டிகளின் எண்ணிக்கை, ஆறில் இருந்து ஐந்தாக குறைக்கப்பட்டுள்ளது. சாதாரண பயணிகள் வசதிக்காக, முன்பதிவில்லா பொதுப்பெட்டிகள் எண்ணிக்கை, மூன்றில் இருந்து நான்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வாரந்தோறும் புதன்கிழமை மட்டும் இயங்கும், இந்த வாராந்திர சூப்பர்பாஸ்ட் ரயிலில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மேற்கு மண்டல மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வட மாநிலத்தினர் பயணிக்கின்றனர். இந்த அறிவிப்பு பொது பெட்டிகளில் பயணிக்கும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.