/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மருத்துவ படிப்பு அட்மிஷன் ஆக., 30ம் தேதி துவக்கம்
/
மருத்துவ படிப்பு அட்மிஷன் ஆக., 30ம் தேதி துவக்கம்
ADDED : ஆக 23, 2024 10:11 PM
திருப்பூர்:மருத்துவக் கல்லுாரிகளில், இளநிலை மருத்துவப் படிப்புக்கான அட்மிஷன், வரும் 30ம் தேதி முதல் துவங்குகிறது.
இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான, 'நீட்' தேர்வு மே 5ம் தேதி நடந்தது; ஜூன் 4ல் தேர்வு முடிவுகள் வெளியாயின.
வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம், கருணை மதிப்பெண் பிரச்னை, கோர்ட் வழக்கு உள்ளிட்ட பல்வேறு நடைமுறை சிக்கல்கள் காரணமாக, தாமதமான கவுன்சிலிங், ஆகஸ்ட் மூன்றாவது வாரம் துவங்கியது.
மாற்றுத்திறனாளிகள், சிறப்பு பிரிவு, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கவுன்சிலிங், கடந்த 22ல் நிறைவு பெற்றது. செப்., 4 முதல், 22 வரை இரண்டாம் கட்டமாகவும்; செப்., 25 முதல் அக்., 15 வரை, மூன்றாம் கட்டமாகவும் கவுன்சிலிங் நடக்கிறது.
அக்., முதல் வாரம் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. கவுன்சிலிங் முடிந்த மாணவர்கள், ஆக., 30 முதல் தாங்கள் தேர்வு செய்த மருத்துவக்கல்லுாரிகளில் இணைந்து கொள்ளலாம். அட்மிஷன் தொடர்பான விரிவான வழிகாட்டுதல்கள் கல்லுாரி முதல்வர்களுக்கு, மருத்துவ கல்லுாரி கல்வி இயக்கம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

