/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அ.தி.மு.க., பொதுக்கூட்டம்; மேடை அமைப்பு ஜரூர்
/
அ.தி.மு.க., பொதுக்கூட்டம்; மேடை அமைப்பு ஜரூர்
ADDED : ஏப் 02, 2024 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்;திருப்பூர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர் அருணாசலத்தை ஆதரித்து, பிரசார பொதுக்கூட்டம், திருப்பூரில் வரும், 10ம் தேதி மாலை நடக்கிறது. அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.
கூட்டம் நடத்த பி.என்., ரோடு பாண்டியன் நகர் அருகில், 10 ஏக்கர் அளவிலான இடம் தேர்வு செய்யப்பட்டு, சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
மேடை அமைக்க பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதில்,எம்.எல்.ஏ.,க்கள் ஆனந்தன், விஜயகுமார், ஜெயக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன், உட்பட பலர் பங்கேற்றனர்.

