/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலை விதி கடைப்பிடிக்க மாணவர்களுக்கு 'அட்வைஸ்'
/
சாலை விதி கடைப்பிடிக்க மாணவர்களுக்கு 'அட்வைஸ்'
ADDED : மே 10, 2024 12:59 AM
திருப்பூர்;ஆடல் வல்லான் அறக்கட்டளை, உமாசங்கர் - சாந்தி அறக்கட்டளை மற்றும் சபரி டைமண்ட் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான கோடை கால பயிற்சி முகாம், திருப்பூர் ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று, 'பாதுகாப்பான பயணம்' என்கிற தலைப்பில் முகாம் நடைபெற்றது. இதில், சாலை விதி மீறல் காரணமாக ஏற்பட்ட விபத்துகள் குறித்த வீடியோ திரையிடப்பட்டது.
துணை முதன்மை டிராபிக் வார்டன் முத்துபாரதி பேசியதாவது: விலைமதிப்பில்லாத உயிரை, சாலை விபத்துகளில் இழந்துவிடக்கூடாது. மாணவ, மாணவியர், தங்கள் பெற்றோரை, சாலை விதிகளை கடைபிடிக்க வலியுறுத்தவேண்டும். இரு சக்கர வாகனங்களில், வாகனம் ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர் ஆகிய இருவரும் ஹெல்மெட் அணியவேண்டும். மாணவ, மாணவியர் தங்களுக்கென்று தனியே ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.