ADDED : ஆக 12, 2024 11:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்டோருக்கு, நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாக இவர்களில் யாருக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அடையாள அட்டை பெற்றவர்களுக்கு வேலையும், சட்டப்படியான ஊதியமும் வழங்க கேட்டு, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், வெள்ளகோவில் புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட குழு உறுப்பினர் பழனிசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பஞ்சலிங்கம் கோரிக்கைளை விளக்கிப் பேசினார். மாவட்ட நிர்வாகிகள் திருவேங்கடசாமி, தங்கவேல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

