/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பசுந்தாள் உர மேலாண்மை; வேளாண் அதிகாரி ஆய்வு
/
பசுந்தாள் உர மேலாண்மை; வேளாண் அதிகாரி ஆய்வு
ADDED : ஜூலை 24, 2024 08:30 PM

உடுமலை : உடுமலை அருகேயுள்ள கல்லாபுரத்தில், பசுந்தாள் உர மேலாண்மை குறித்து, இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
உடுமலை வட்டாரம், கல்லாபுரத்தில், தமிழக முதல்வரின் மண்ணுயிர் காப்போம் திட்டத்தின் கீழ், பசுந்தாள் உர வினியோகம் செய்யப்பட்டிருந்தது.
தற்போது, பூக்கும் பருவத்தில் உள்ள நிலையில், அதனை திருப்பூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கிருஷ்ணவேணி ஆய்வு செய்தார். உடுமலை வேளாண் உதவி இயக்குனர் தேவி, வேளாண் அலுவலர் அமல்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது:
அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதிகளில், நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு இயற்கை உரமாகவும், உரச்செலவு மற்றும் மகசூல் அதிகரிக்கும் வகையில், பசுந்தாள் சாகுபடி குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
மண்ணுயிர் காத்து, மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ், பசுந்தாள் உர விதைகள் வினியோகம் செய்யப்பட்டது.
விளை நிலங்களில், பயிர் சாகுபடிக்கு முன், 20 கிலோ பசுந்தாள்உர விதைகள் விதைப்பதால், 10 டன் அளவு உயிர்ம பொருட்களோடு, மண்ணின் கரிமச்சத்து அதிகரிக்கிறது. பசுந்தாள் பூக்கும் பருவத்தில் மடக்கி உழவு செய்ய வேண்டும்.
இவ்வாறு, செய்யும் போது, யூரியா போன்ற ரசாயண உரங்கள் தேவையில்லை. சாகுபடிக்கு முன் உழும்போது, ஒரு ஏக்கருக்கு, 2 மூட்டை சூப்பர் பாஸ்பேட் இட்டால் மட்டும் போதுமானது. இதனால், பெருமளவு உரச்செலவு குறைவதோடு, உற்பத்தியும் அதிகரிக்கிறது. இயற்கை முறையில் மண்ணின் வளம் அதிகரிப்பதோடு, விவசாயிகளுக்கு வருவாய் அதிகரிக்கிறது.
இவ்வாறு, தெரிவித்தனர்.

