/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காற்றில் பறந்த காப்பீட்டு திட்ட படிவங்கள்
/
காற்றில் பறந்த காப்பீட்டு திட்ட படிவங்கள்
ADDED : மே 09, 2024 04:48 AM
பல்லடம் : பல்லடம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற வாகனத்தில் இருந்து காப்பீடு திட்ட படிவங்கள் காற்றில் பறந்தன.
நேற்று மாலை, பல்லடம் நோக்கி வந்த ஆட்டோ ஒன்றிலிருந்து நுாற்றுக்கணக்கான காகிதங்கள் காற்றில் பறந்த படி ரோட்டில் வந்து விழுந்தன. காகிதங்களை, வாகன ஓட்டிகள் பொதுமக்கள் உற்று நோக்கிய போது, அவை பிரதம மந்திரி காப்பீடு திட்ட ங்கள் என்பது தெரிந்தது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், 'தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற ஆட்டோவில் இருந்த அட்டைப் பெட்டியில் இருந்து நுாற்றுக்கணக்கான காப்பீடு திட்ட விண்ணப்ப படிவங்கள் காற்றில் பறந்து ரோட்டில் சிதறி விழுந்தன. அதில், ஆந்திரா வங்கி, யூனியன் வங்கி முத்திரைகள் இடம் பெற்றுள்ளன. கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் கட்டணம் செலுத்தும் விண்ணப்ப படிவமும் இருந்தன.
ஏதேனும் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளதால், இது குறித்து விசாரிக்க வேண்டியது அவசியம்,' என்றனர்.