/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏ.ஐ.டி.யு.சி., கட்டுமான சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
ஏ.ஐ.டி.யு.சி., கட்டுமான சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 27, 2024 11:04 PM

திருப்பூர்:தமிழகம் முழுவதும் உள்ள, தொழிலாளர் நலவாரிய அலுவலகங்கள் முன், ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கத்தின் பெருந்திரள் முறையீடு நேற்று நடந்தது.
திருப்பூரில் நடந்த முறையீடு ஆர்ப்பாட்டததுக்கு, கட்டட தொழிலாளர் சங்க மாவட்ட பொதுசெயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார். பொருளாளர் கணேசன், மாவட்ட குழு உறுப்பினர் ராஜேந்திரன், பழனிசாமி, மாநில செயலாளர் சேகர், மாவட்ட தலைவர் மோகன் ஆகியோர், கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். தொடர்ந்து, சமூக பாதுகாப்புதிட்ட உதவி கமிஷனரிடம் கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
முன்னதாக, தொழிலாளர் நலவாரிய அலுவலகம் அருகே உள்ள ரோட்டில் அமர்ந்து, ஏ.ஐ.டி.யு.சி., சங்கத்தினர் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் போலீசார் அப்புறப்படுத்தினர்.
----
திருப்பூர், பி.என்., ரோட்டிலுள்ள தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன், மறியலில் ஈடுபட்ட ஏ.ஐ.டி.யு.சி., கட்டட தொழிலாளர் சங்கத்தினர்.