/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் பெற்றோர் அன்பின் முன்னே!
/
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் பெற்றோர் அன்பின் முன்னே!
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் பெற்றோர் அன்பின் முன்னே!
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் பெற்றோர் அன்பின் முன்னே!
ADDED : செப் 16, 2024 12:15 AM
தங்கள் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக இமைப்பொழுதும் சோராத தியாகத்தின் விழுதுகளாக 'உழைக்கும் பெற்றோர்' உள்ளனர். குழந்தைகள் பெரியவர்களாக வளர்ந்தபிறகு, நெஞ்சம் மறக்காது,இத்தகைய பெற்றோரிடம் அன்பையும், பாசத்தையும் ஊற்றாக பொழிந்தாக வேண்டும்.
வியர்வையில் முத்துக்குளிக்கும் பெற்றோர் பலர், குழந்தைகளை அன்பில் திளைக்கவைக்க முடியாமல் திணறுவதுண்டு; காலம் கைகொடுப்பதில்லை. குழந்தைகளை உரிய காலத்திற்குள் சிறக்கச் செய்வதற்காக, அகத்திலும், புறத்திலும் கொட்டித்தீர்க்க வேண்டிய பேரன்பின் பெருமழை கூட சற்றுக் காலம் ஓய்வெடுக்க வேண்டிய நிலை. இதோ, தங்கள் நிஜத்தை அப்படியே சொற்களால் முன்வைக்கின்றனர், 'உழைக்கும் பெற்றோர்', நம்மிடம்...