/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இயந்திரங்கள் வாங்க மானியம்: ஊக்குவிப்பு திட்டத்தில் ஒதுக்கீடு
/
இயந்திரங்கள் வாங்க மானியம்: ஊக்குவிப்பு திட்டத்தில் ஒதுக்கீடு
இயந்திரங்கள் வாங்க மானியம்: ஊக்குவிப்பு திட்டத்தில் ஒதுக்கீடு
இயந்திரங்கள் வாங்க மானியம்: ஊக்குவிப்பு திட்டத்தில் ஒதுக்கீடு
ADDED : மே 05, 2024 11:22 PM
உடுமலை;வேளாண் பொறியியல் துறை வாயிலாக, வேளாண் இயந்திரமயமாக்கும் துணை இயக்க திட்டத்தின் கீழ் மானிய திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது.
சிறு மற்றும் குறு விவசாயிகளிடையே வேளாண்மை இயந்திரமயமாக்குதலை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு -60 சதவீதம், மாநில அரசு 40 சதவீத நிதி ஒதுக்கீட்டில் மானியம் வழங்கப்படுகிறது.
தனிப்பட்ட விவசாயிகளுக்கான திட்டத்தில், ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு, 50 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியமும் வழங்கப்படும்.
மேலும், திட்டத்தின் கீழ், வேளாண் இயந்திர வாடகை மையங்கள் துவக்கலாம். வட்டார அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையத்துக்கு, 40 சதவீத மானியம் உண்டு.
கிராமப்புற தொழில் முனைவோர்கள், பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்கள், மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் வட்டார அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையம் நிறுவலாம்.
கிராம அளவிலான மையம் அமைக்க, 80 சதவீத மானியம் உண்டு. பதிவு செய்யப்பட்ட விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்பினர் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
தனிப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளான, டிராக்டர், சுழற்கலப்பை (ரோட்டவேட்டர்), பவர்டில்லர் (8 எச்.பி.,க்கு மேல்), நெல் நாற்று நடவு இயந்திரம், விசைக்களையெடுப்பான், தட்டை வெட்டும் கருவி, புதர் அகற்றும் கருவி, அறுவடை இயந்திரம், பல்வகைப்பயிர் கதிரடிக்கும் இயந்திரம் வாங்க, மானியம் வழங்கப்படும்.
சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டத்திலுள்ள உதவி செயற் பொறியாளர் வேளாண்மைப்பொறியியல் துறையை அணுகலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.