ADDED : ஆக 04, 2024 11:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆடி அமாவாசையையொட்டி, அகத்தியர் எண்ணான்கு அறங்கள் தர்ம பரிபாலன அறக்கட்டளை சார்பில், செட்டிபாளையம் முருகா மருத்துவமனை வளாகத்தில் உள்ள, அகத்தியர் சன்னதியில் சிறப்பு யாகபூஜை நடந்தது.
காலை 6:30 மணிக்கு, ஸ்ரீசூலினி பிரத்தியங்கிரா சமேத சரபேஸ்வர மகா யாகம் நடந்தது. ஸ்ரீவித்யா பராபட்டாரிகா மகா சோடஷி, விநாயகர் மற்றும் அகத்தியருக்கு, அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. பின், ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலின் முன், 4,000 பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ''தை, ஆடி மற்றும் மகாளய அமாவாசை நாட்கள், சித்திரைக்கனி, மார்கழி மாதம் வரும் அகத்தியர் ஜென்ம நட்சத்திரமான ஆயில்யம் நட்சத்திர நாள், சித்ரா பவுர்ணமி ஆகிய நாட்களில், அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது'' என்று அறக்கட்டளையினர் தெரிவித்தனர்.