/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மேலும் சில வங்கிகளில் நகைகள் அடகு வைத்த மோசடி மேலாளர்
/
மேலும் சில வங்கிகளில் நகைகள் அடகு வைத்த மோசடி மேலாளர்
மேலும் சில வங்கிகளில் நகைகள் அடகு வைத்த மோசடி மேலாளர்
மேலும் சில வங்கிகளில் நகைகள் அடகு வைத்த மோசடி மேலாளர்
ADDED : ஆக 25, 2024 01:33 AM
திருப்பூர்;திருப்பூரில் மேலும் சில வங்கிகளில் நகைகளை அடகு வைத்து கைதான கேரள வங்கி மேலாளர் பணம் பெற்றிருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர்.
கேரள மாநிலம், கோழிக்கோடு, வடகரையில் உள்ள பாங்க் ஆப் மகாராஷ்டிரா கிளையில் மேலாளராக பணிபுரிந்து வந்தவர் மாதா ஜெயக்குமார், 34; போலி நகைகளை வைத்துவிட்டு, வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த அசல் நகைகளைத் திருடி பல்வேறு வங்கிகளில் அடகு வைத்து பணத்தை பெற்றுள்ளார்.
கேரள தனிப்படை போலீசார், மாதா ஜெயக்குமாரை கைது செய்து விசாரித்தனர்.
திருப்பூரில் டி.பி.எஸ்., வங்கியில் பணியாற்றிவந்த இவரது நண்பர் கார்த்திக் என்பவர் துணையுடன், இந்த வங்கியில் 5 கிலோ 300 கிராம் நகைகளை அடகு வைத்து 3 கோடி ரூபாய் பணம் பெற்றது தெரியவந்தது.
நேற்றுமுன்தினம் திருப்பூர் வந்த கேரள தனிப்படை போலீசார், டி.பி.எஸ்., வங்கியில் இந்த நகைகளை மீட்டனர்.
போலீசார் கூறுகையில், ''திருப்பூரில், மேலும், சில வங்கிகளில் நகைகள் அடகு வைக்கப்பட்டுள்ளன. அந்த விபரம் தலைமறைவாக உள்ள கார்த்திக்கிற்கு தெரியும் என்பதால், அவரை பிடிக்கும் பணியில் உள்ளோம். அவர் பிடிபடும் பட்சத்தில் முழுமையான மோசடி நகை உள்ளிட்ட அனைத்து விபரங்களும் தெரிய வரும்'' என்றனர்.