/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இரவில் சேலத்துக்கு கூடுதல் பஸ் தேவை
/
இரவில் சேலத்துக்கு கூடுதல் பஸ் தேவை
ADDED : ஆக 03, 2024 06:28 AM
திருப்பூர்: ' வார விடுமுறை நாட்களில் சேலத்துக்கு இரவில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்,' என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
அதிகாலை, 3:45 மணி முதல், நள்ளிரவு, 12:45 வரை, ஐந்து நிமிடத்துக்கு ஒரு பஸ், திருப்பூரில் இருந்து பெருந்துறை, பவானி வழியாக சேலத்துக்கு இயக்கப்படுவதாக, போக்குவரத்து கழகம் தெரிவிக்கிறது.
ஆனால், நேற்று முன்தினம் இரவு, 11:15க்கு சேலத்துக்கு ஒரு பஸ் (டி.என்., 39 0195) இயக்கப்பட்ட நிலையில், அடுத்த ஒரு மணி நேரம் பஸ் இல்லை. பயணிகள் பலரும் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் ஸ்டாப்பில் காத்திருந்த நிலையில், நள்ளிரவு, 12:15 க்கு பின் தான் ஒரு பஸ் வந்துள்ளது.
பயணிகள் கூறுகையில்,' சேலத்துக்கு வார இறுதி நாட்களில் பஸ்கள் குறைக்கப்பட்டு விடுகிறது. மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ் புறப்படும் போது, படிக்கட்டு கேட் மூடப்பட்டு விடுகிறது. வழியில் பஸ் ஸ்டாப்களில் பயணிகள் காத்திருந்து, பஸ்ஸை நிறுத்தினால், பஸ் ஏற அனுமதிப்பதில்லை.
அடிக்கடி நடத்துனர் - பயணி இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. அருகில் உள்ள ஈரோடு, சேலம் மாவட்டத்துக்கு, திருப்பூரில் இருந்து நள்ளிரவு சென்று வரும் பஸ்களை கண்காணிப்பதுடன், பயணிகள் எண்ணிக்கை ஏற்ப பஸ்களையும் இயக்க வேண்டும்,' என்றனர்.