/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூடுதல் போலீஸ் ஸ்டேஷன் பல்லடத்துக்கு அவசியம்
/
கூடுதல் போலீஸ் ஸ்டேஷன் பல்லடத்துக்கு அவசியம்
ADDED : ஜூன் 24, 2024 02:17 AM
பல்லடம்;பல்லடம் வட்டாரத்தில், குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பல லட்சம் தொழிலாளர்கள், பொதுமக்கள் வசிக்கும் இப்பகுதியில், நான்கு போலீஸ் ஸ்டேஷன்கள் மட்டுமே உள்ளன.
குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில், கரைப்புதுார், கணபதிபாளையம் பகுதிகளை உள்ளடக்கி கூடுதல் போலீஸ் ஸ்டேஷன் ஏற்படுத்த வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், கடந்த ஆட்சியிலும், இக்கோரிக்கை செயல்படுத்தப்படவில்லை. தற்போது, பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், அருள்புரம் பகுதியில்புதிய போலீஸ் ஸ்டேஷன் அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அரசு நடவடிக்கை எடுக்கும் வகையில், மக்கள் பிரதிநிதிகளும் கோரிக்கையை வலியுறுத்த வேண்டியது அவசியம்.