/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கல், குப்பையுடன் கோதுமை எடையை கூட்டும் முயற்சியா?
/
கல், குப்பையுடன் கோதுமை எடையை கூட்டும் முயற்சியா?
ADDED : மே 01, 2024 11:46 PM

பல்லடம், : ரேஷன் கடைகளில், கல் மற்றும் குப்பைகளுடன் கோதுமை வழங்கப்படுவது, எடையை கூட்டும் முயற்சியா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அத்தியாவசிய பொருட்கள், தரமாக இருந்தால் மட்டுமே பொதுமக்களும் பயன்படுத்த முடியும். இல்லையெனில், ரோட்டுக்கு தான் வரும் என்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துள்ளது. கடந்த காலங்களில் தரமற்ற அரிசி விநியோகிக்கப்பட்டு வந்ததன் காரணமாக, பொதுமக்கள் பரவலாக எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதனால், ஓரளவு தரத்துடன் கூடிய அரிசி தற்போது விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால், ரேஷன் கடையில் மூலம் வழங்கப்படும் கோதுமை, கல் மற்றும் குப்பைகளுடன் உள்ளதாக பல்லடம் வட்டாரத்தில் குற்றச்சாட்டு உள்ளது.
இதன் மூலம் எடையை கூட்டி, முறைகேட்டில் ஈடுபடும் முயற்சியா? என்ற கேள்வியும் எழுகிறது. பொதுமக்கள் கூறுகையில், ஒரு கிலோ கோதுமையில், கல், குப்பைகளை கழித்தால், 100 கிராம் வரை குறைய வாய்ப்பு உள்ளது.
ஒரு கிலோ கோதுமையிலேயே இந்நிலை என்றால், ஏழை எளிய மக்கள் எப்படி இதை பெற்று முழுமையாக பயன்பெற முடியும். இது குறித்து மாவட்ட நிர்வாகம் ரேஷன் கடைகளில் ஆய்வு செய்து கல், குப்பைகள் இன்றி கோதுமை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

