/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'விழிப்புணர்வு நிறைந்தவரே அதிகாரமிக்க நுகர்வோர்!'
/
'விழிப்புணர்வு நிறைந்தவரே அதிகாரமிக்க நுகர்வோர்!'
ADDED : மார் 21, 2024 11:27 AM
திருப்பூர்:'நுகர்வு எதுமாதிரி இருக்க வேண்டும்' என்பதை விளக்க, உலக நுகர்வோர் உரிமை தினம் கடைபிடிக்கப்பட்டது.
திருமுருகன்பூண்டி நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கடைபிடிக்கப்பட்ட உலக நுகர்வோர் உரிமை தினத்தில், பூண்டியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் நிகழ்ச்சி நடந்தது.
நுகர்வோர் சங்க தலைவர் காதர் பாட்ஷா, பொது செயலாளர் ராமலிங்கம், அமைப்பு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் வக்கீல் கவிதா ஆகியோர் பங்கேற்று, அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உறுதிமொழியை வாசிக்க, கூடியிருந்தவர்கள் ஏற்றுக் கொண்டனர்.
''நுகர்வோராகிய நாம், நுகர்வியல் கல்வியை அறிவதுடன், நுகர்வோருக்குரிய உரிமைகளை நிலை நிறுத்த வேண்டும். தரமான, பாதுகாப்பான பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்; அவற்றுக்கு கட்டாயம் 'பில்' வாங்க வேண்டும்.
நுகர்வோரின் அடிப்படை உரிமையை அறிந்து, நுகர்வோர் கல்வியை பரப்ப வேண்டும். விழிப்புணர்வு நிறைந்த நுகர்வோரே அதிகாரமிக்க நுகர்வோர் என்பதை உணர வேண்டும்'' என்று, நிர்வாகிகள் பேசினர்.

