/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆனைமலையாறு- - நல்லாறு திட்டம் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் மாயம்
/
ஆனைமலையாறு- - நல்லாறு திட்டம் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் மாயம்
ஆனைமலையாறு- - நல்லாறு திட்டம் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் மாயம்
ஆனைமலையாறு- - நல்லாறு திட்டம் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் மாயம்
ADDED : மார் 21, 2024 11:32 AM

பொங்கலுார்;கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் உயிர் நாடியாக விளங்குவது பி.ஏ.பி., திட்டம். இத்திட்டத்தின் கீழ், 12 அணைகள் கட்ட ஒப்பந்தம் செய்யப்பட்டது.
தமிழகம் சார்பில் ஏற்கனவே ஒன்பது அணைகளும், கேரளா சார்பில் ஒரு அணையும் கட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள ஆனைமலை ஆறு - நல்லாறு திட்டம் மட்டுமே பாக்கி. இந்த இரண்டு அணைகளும் கட்டப்பட்டால் மட்டுமே பி.ஏ.பி., திட்டம் முழுமை பெறும்.
தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தண்ணீரின் அளவைப் பொறுத்து, 10 முதல், 35 நாட்கள் வரை தண்ணீர் விடப்படுகிறது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் ஆண்டுக்கு ஒரு முறை இதே அளவு தண்ணீரை வழங்க முடியும். எனவே, இத்திட்டம் கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
ஆனால், கடந்த தேர்தலில் தி.மு.க., இத்திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து வாக்குறுதி அளித்து இருந்தது. ஆனால், தற்போதைய தேர்தல் அறிக்கையில் கோதாவரி காவிரி திட்டம், பம்பை அச்சன்கோவில் - வைப்பாறு திட்டம் போன்றவற்றை தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ளது.
ஆனால், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கவில்லை. தி.மு.க., மாநிலத்தில் ஆளும் கட்சி. பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றி வாய்ப்பை அறுவடை செய்யக்கூடிய நிலையில் உள்ளது. ஆனால், தி.மு.க., இத்திட்டத்தை பற்றி வாய் திறக்காதது பாசன விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

